Prev

Next

Ayurvedic Tips featured in Malligai Magal

by Pritya Books on April 20, 2009

Malligai Magal, Tamil magazine featured 25 Ayurvedic tips from our Ayurvedic cookbook, “Sukham Ayu” after translating it into Tamil. The article was titled, “Ayurveda Unavu 25 Kurippugal”.

Ayurvedic tips from ayurvedic cookbook

Here is a transcript of the article:
நோய் நொடியில்லாத ஆரோக்கியமான உடல் நலனுக்கு, முறையான உணவுப் பழக்கமும் காலத்துக்கேற்ற வாழ்க்கை முறையும் தான் அடிப்படைத் தேவையாக உள்ளது. அதற்காக நீண்ட சாப்பாட்டு வகை பட்டியல் தயாரித்து, கிடைத்தற்கரிய பொருட்களை தேடிப் பிடித்து வாங்கி சமைத்து சாப்பிட வேண்டும் என்பதல்ல. வீ ட்டிற்கு அருகிலேயே மற்றும் காலநிலைக்கேற்ப கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு வீட்டிலேயே சுலபத்தில் சமைக்கக் கூடிய உணவுகளை உண்ணுவதே சிறந்தது. ஆயுர்வேத உணவுப்பழகத்திதின் அடிப்படையே இது தான்.”
இப்படி சொல்லும் ஜிக்யஸா கிரியும் ப்ரதீபா ஜெயினும் ஆயுர்வேதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோழிகள். பூனாவில் உள்ள ‘கேர்’ என்னும் இயற்க்கை வைத்திய ஆராய்ச்சி மையத்தின் ஆயுர்வேத நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு, சமீபத்தில் இவர்கள் எழுதிய ஆயுர்வேத சமையல் குறிப்புகள் அடங்கிய ‘சுகம் ஆயு’ என்னும் நூல் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. ஆரோக்கிய வாழ்க்கை ஆயுர்வேதம் சொல்லும் உணவு குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறார்கள் ஜிக்யஸாவும் பிரதீபாவும்…
ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்பும் ஒரு டீஸ்பூன் அரைத்த இஞ்சியோடு சிறிது உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு உணவின் ஆறு சுவைகளையும் அனுபவித்து ரசித்து சாப்பிட முடியும். ஆனால், ரத்த கொதிப்பு, வயிற்றுப்புண், அஜிரணம், மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பச்சை இஞ்சியைச் சாப்பிட வேண்டாம். அதேபோல் கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் இஞ்சி சாப்பிடுவதைத் தவிருங்கள்.
எளிதில் ஜீரணமாகாத, கடினமான உணவுகளை காலை உணவாக உட்கொள்ளாதீர்கள். மூலிகைத் தேநீருடனும், சில பழங்களுடனும் அதைத் தொடர்ந்தது இட்லி போன்ற எளிமையான உணவுடனே காலை வேளையைத் தொடங்குகள்.
பொதுவாகவே மதியவேளையின்போது நமது உடலின் ஜீரண சக்தி உச்சகட்டத்தில் இருக்குமென்பதால், மனதிற்குப் பிடித்த எந்த உணவையும் உண்ணலாம். கோடை காலத்தின்போது மட்டும் மிகவும் சூடான மற்றும் காரமான உணவை உட்கொள்ளாதீர்கள். கூடவே, உணவின் இறுதியில் கட்டாயம் கொஞ்சம் மோர் சேர்த்து கொள்ளுங்கள்.
கூடிய வரை இரவு சாபாட்டை சீக்கிரமே முடித்துக்கொள்ளுங்கள். அதாவது, இரவு சாப்பாட்டுக்கும் நீங்கள் தூங்கப்போகும் நேரத்துக்கும் இடையே உள்ள கால அவகாசம் உங்கள் இரவு சாப்பாட்டை ஜீரணிக்கப் போதுமானதாக இருக்க வேண்டும். அதேநேரம், இனிப்பு பதார்த்தங்கள் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் இரவில் இனிப்புகள் உண்ணுவதைத் தவிர்த்திடுங்கள்.
முதல் வேளையில் சாப்பிட்ட உணவு ஜீரணிப்பதற்கு முன்பு அடுத்த வேளை உணவு உட்கொள்ளாதீர்கள். அடுத்தடுத்த உணவு வேளைகளுக்கு குறைந்தது 5 அல்லது 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். ஆனாலும், அந்த இடைவெளி நேரத்தின்பொது பசி எடுத்தால் வயிற்றை காய விடாமல் ஒரு பழம் அல்லது எளிமையான ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம். பசியுடன் நீண்ட நேரமிருந்தால் ஜீரண சக்தி குறைந்து வாயுக்கோளாறு மற்றும் வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நம்மில் பெரும்பாலானோர் பசி எடுத்தால் தண்ணீரை குடித்தும், தாகம் எடுத்தால் குளிர்பானங்களைக் குடித்தும் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம். ஆனால், பசியை உணவினாலும், தாகத்தைத் தண்ணீரினாலும் மட்டும்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.
உணவு உண்ட பிறகு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதோ.. அல்லது, தண்ணீரே அருந்தாமல் உணவு உண்பதோ.. இரண்டுமே உணவின் ஜீரணத்தை பாதிக்கும். அதேபோல், உணவு உண்பதற்கு முன்னால் தண்ணீர் குடிப்பதனால் நம் உடல் பலவீனமடைந்தது ஜீரணம் வேகம் குறைகிறது. உணவு உண்ட பிறகு அதிகமாகத் தண்ணீரை மடமடக்கென்று அருந்தும்பொது நம் உடலில் கபம் அதிகரித்து, அதனால் உடல் எடையும் அதிகரிக்கிறது. எனவே, உணவு உண்ணும்போது ஓரிருமுறை லேசாக அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.
சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும் என்பது மிகவும் முக்கியம். குளிர் காலத்தின்போது குளிர்ந்த மற்றும் வறண்ட உணவுகளை உண்பதோ, கோடை காலத்தின் பொது மிகவும் சூடான மற்றும் காரமான உணவுகளை உண்பதோ நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். பொதுவாக, நம் உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு உள்ளிட்ட ஆறு சுவைகளும் அடங்கியிருக்க வேண்டும்.
பசும்பாலில் இருந்து தாயாரிக்கப்படும் நெய், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்கிறது ஆயுர்வேதம். உணவை ஜீரணிக்க உதவுவதோடு கண்களுக்கு அருமருந்தாகவும், சருமம் பளபளக்கவும் நெய் உதவுகிறது. அதோடு, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது; நீண்ட ஆயுள் அளிக்க வல்லது; கபம், பித்தம், வாயு உள்ளிட்ட அத்தனை தோஷங்களையும் நெய் சமப்படுத்துகிறது.
சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் உணவில் நல்லெண்ணெயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.உடலில் லாக்டோஸ் குறைபாடு உள்ளவர்களும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.
எப்போதும் வெவெதுப்பான சூட்டில் உள்ள உணவையே உண்ணுங்கள். அதுதான் செரிமானத்துக்கு உகந்தது. மிகுந்த சூட்டோடு உணவு உட்கொள்ளும் போது அது முழுமையாக சுவைக்கப்படாமல் அவசர அவசரமாக முழங்கப்பட்டு விடுவதால் உணவின் சுவையை உணர்ந்து ரசித்து நம்மால் சாப்பிட முடிவதில்லை. இதனால் செரிமானமும் பாதிக்கபடுகிறது. அதேபோல், குளிர்ந்த மற்றும் வறண்ட உணவு வகைகளும் செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றன.
உணவும் மருந்தும் வேறு வேறு அல்ல என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள், எல்லா உணவுகளுமே சரியான விகிதாச்சாரத்தில் முறையாக சமைக்கப்பட்டு உட்கொள்ளப்ப்படும்போது நோய் தடுப்பு மருந்தாகத்தான் செயல்படுகிறன.
மகிழ்ச்சியான சூழலில் உணவின் மீது முழுமையான கவனம் செலுத்தி உணவு உட்கொள்ளும் பொது அந்த உணவின் சக்தி நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது. இதை விடுத்து யாரையாவது திட்டிக்கொண்டோ, விமர்சித்துக்கொண்டோ உணவு உண்டால் அந்த உணவிலிருந்து நமக்குக் கிடக்க வேண்டிய சக்தி பெருமளவில் குறைகிறது.
எளிமையான முறையில் ஒவ்வொரு வேளையும் புதிதாக வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவு தான் மிகச்சிறந்த உணவு. புதிதாக சமைக்கப்பட்ட உணவு சுவையானதாகவும், ஜீரண சக்தியைத் தூண்டி விடுவதாகவும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.மோசமான விளைவுகளை குறித்தும், வாயு உபத்திரவங்களைக் குறித்தும் இது உடலை லேசாக்குகிறது.
எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலைக்கும் ஏற்றவாறு இயற்கையான முறையில் உற்பத்தியாகின்ற உணவுப் பொருளே மிகச்சிறந்தது. உதராணமாக கோடைகாலத்தில் கிடைக்ககூடிய தர்பூசணியைச் சொல்லலாம். இவ்வாறில்லாமல் குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் கிடைக்கக் கூடிய பொருட்களை எல்லா காலங்களிலும் பயன்படுத்துமாறு குளிர் நிலையில் பாதுகாத்து பதப்படுத்திப் பயன்படுத்தும்போது, ஒன்று.. அது நமக்கு அளிக்கும் பலன் குறைகிறது. அல்லது, பலனே அளிக்காமல் போகிறது. இன்று வேதியல் முறை படி மரபணு மாற்றம் செய்யப்பட உணவு பொருட்கள் உலகம் முழுவதும் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. இயற்க்கை அல்லாத உணவுப் பொருட்களை நம் உடல் உடனே கண்டுபிடித்துவிடும். எனவே, கூடுமானவரை இயற்க்கை வேளாண்மை முறைப்படி விளைவிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டி மீண்டும் இயற்கையான வாழ்க்கை முறைக்கு திரும்புவோம்.
புடலை, பூசணி, சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு இனிப்பு கலந்து கொண்டால் இதயம் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
பருவகாலங்களுக்கு ஏற்ற உணவு பதார்த்தங்களில் அயோடின் சேர்க்கப்பட்ட டேபிள் சால்ட் சேர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, பொடி செய்த கலுப்பு சேர்த்து பயன்படுத்துங்கள்.
அதேபோல், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வண்ணம் நீக்கப்பட்டது பளிச் வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரைக்கு பதிலாக சீனிக்கட்டியைப் பயன்படுதுங்கள். பொதுவாகவே, இனிப்பு கடினமானது என்பதால் கபத்தை அதிகரிக்கும். அதனால் ஏலக்காய், ஜாதிக்காய், மற்றும் இலவங்கம் போன்ற வாசனைப் பொருட்களைச சேர்த்துக்கொள்வது. நல்லது.
நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெறுவதற்கு உறுதியான வழி என்ன தெரியுமா? தினமும் ஒரு முறையான நேரத்தில் உணவு உட்கொள்கிற உணவு முறையும், மேற்கொள்கிற தூக்கமும் தான் என்கிறது ஆயுர்வேதம். ஏதாவது ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பதையோ அல்லது கடுமையான விரதங்கள் மேற்கொள்வதையோ ஆயுவேதம் அனுமதிப்பதில்லை. மாறாக, கடுமையான பசியால் களைப்பு உண்டாகும் வரை காத்திருக்காமல், பசி எடுத்த உடனேயே சாப்பிட்டுவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
எலுமிச்சை ஒரு நல பசி தூண்டியாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் உள்ளது. உணவு பதார்த்தங்களில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தாலும், உணவின் சுவை கூடுவதோடு அந்த உணவு செரிமானத்தின் வேகமும் அதிகமாகத் தூண்டிவிடப்படுகிறது.
சிட்ரஸ் மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழங்களான ப்ளம்ஸ், கூச்பெரிஸ் மற்று புளி.. இவற்றோடு பால் சேர்த்து உண்ணக்கூடாது. புளிப்பான பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, மற்றும் தேங்காய் இவற்றோடும் பால் சேர்த்து உண்ணக்கூடாது. அது மட்டுமல்ல, தட்டப்பயிறு, கொள்ளு, உளுந்து, போன்ற பயறுகளுடன் பாலைச் சேர்த்து பயன்படுத்தக் கூடாது.
முள்ளங்கி, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, மற்றும் துளசி ஆகியவற்றைக் சாப்பிட்டிருந்தால் அன்று பால் அருந்துவதைத் தவிர்த்திருங்கள்.
இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை சாப்பிட நேர்ந்தாலும் கூடவே சீனி அல்லது பச்சைப்பயிறு கூட்டு, அல்லது தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.தயிரைச் ஒருபோதும் சமைத்தது பயன்படுத்தக் கூடாது. தயிரைச் சூடு செய்தால் அது உடலுக்கு பெரும்கேட்டை விளைவிக்கும். மோரை சூடு செய்யலாம். ஆனால், ஒருபோதும் தயிரை சூடாக்கவே கூடாது என்கிறது ஆயுர்வேதம்.
சூடுதண்ணீரில் தேனைக் கலந்து பருகாதீர்கள். அதேபோல் தேனைச் சுடவைத்துப் பயன்படுத்துவதும் உடலுக்குக் கேடுதான். ஒருவரது உடல்சூடுகூட தேனை சூடாக்கும் என்கிறது ஆயுர்வேதம். அதனால், சன் ஸ்ட்ரோக்கால் அவதிப்படுபவர்கள் தேனை தவிர்த்திட வேண்டும். அதோடு, தேனையும், நெய்யையும் ஒருபோதும் சமஅ ளவில் கலந்து பயன்படுத்தாதீர்கள்.
உள்ளூரிலேயே இயற்கையான முறையில் விளைத்த பொருட்களையே உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த பொருளில் நீங்கள் வாழ்கிற இடத்தின் தன்மை இருக்கும். ஒரு வேளை நீங்கள் நீண்ட விடுமுறையிலோ அல்லது இடமாறுதல் காரணமாகவோ வேறு இடத்துக்குச் செல்லவேண்டி இருந்தால் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் தட்பவெப்பநிலை மற்றும் தன்மைக்கும் மட்டுமின்றி அந்த இடத்தின் உணவு பழக்கத்துக்கும் உங்கள் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொள்ள வாய்ப்பளியுங்கள்.

(As featured in Malligai Magal, April 2009)

Share...Share on Google+Pin on PinterestShare on LinkedInTweet about this on TwitterShare on FacebookShare on TumblrDigg this

Related posts:

  1. Recipes Garnished with Love & Cooking Tips – The Hindu

Leave a Comment